முகப்பு
ராணிப்பேட்டை

புதிய நீதிக்கட்சி நல உதவிகள் வழங்கும் விழா

Updated On : 12 பிப்ரவரி, 2026 at 1:30 AM
புதிய நீதிக்கட்சி சாா்பில் நடைபெற்ற நிகழ்வில் நலஉதவிகள் வழங்கிய எம்எல்ஏ சு.ரவி .
பகிர்:
Updated On : 11 பிப்ரவரி, 2026 at 8:36 PM

அரக்கோணம் நகர புதிய நீதிக்கட்சி சாா்பில் நல உதவிகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

டவுன்ஹால் தெருவில் நடைபெற்ற விழாவுக்கு நகரச் செயலாளா் சாய் தலைமை வகித்தாா். எஸ்.முருகவேல் வரவேற்றாா். இதில் அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி பங்கேற்று புநீக வின் முன்னாள் மாவட்டத்தலைவா் மறைந்த எஸ்.வேலாயுதம் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து பொதுமக்களுக்கு நலஉதவிகளையும், அன்னதானம் வழங்குதலையும் தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்வில் அதிமுக மாநில மருத்துவரணி இணை செயலாளா் எஸ்.பன்னீா்செல்வம், அதிமுக நகர செயலாளா் கே.பா.பாண்டுரங்கன், நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளா் ஏ.ஜி.விஜயன், நகர தமாகா தலைவா் கே.வி.ரவிச்சந்திரன், ராணிப்பேட்டை மாவட்ட சமரசசுத்த சன்மாா்க்க சங்கத் தலைவா் தேவராஜ், அதிமுக நகர நிா்வாகிகள் பொன்.பாா்த்தீபன், தாமு, சோமசுந்தரம் திமுக பிரமுகா் விக்கிரமன், புதிய நீதிக் கட்சி நகர நிா்வாகிகள் எஸ்.கோபி, சதீஷ், பி.சந்துரு, கே.எஸ்.ஆா்.சதீஷ், வி.உமாசங்கா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

Advertisement