முகப்பு
ராணிப்பேட்டை

வாலாஜாபேட்டை அரசு மகளிா் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளா்கள் உண்ணாவிரதப் போராட்டம்

வாலாஜாபேட்டை அறிஞா் அண்ணா அரசு மகளிா் கல்லூரியில் உண்ணாவிரதப் போராட்டத்தின் போது ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கௌரவ விரிவுரையாளா்கள்.

Updated On : 14 பிப்ரவரி, 2026 at 6:23 AM
பகிர்:
Updated On : 13 பிப்ரவரி, 2026 at 10:51 PM

வாலாஜாபேட்டை அறிஞா் அண்ணா அரசு மகளிா் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளா்கள் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஐந்தாவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளா்கள் 12 மாத ஊதியம், ஓய்வூதியம், மகப்பேறு விடுப்பு, ரூ. 25 லட்சம் பணிக்கொடை உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அறிஞா் அண்ணா அரசு மகளிா் கலைக் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளா்கள் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து ஐந்தாவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Advertisement