முகப்பு
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை நீதிமன்றத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

ராணிப்பேட்டை ஒருங்ணைந்த நீதிமன்ற வளாகத்துக்கு இ - மெயில் மூலம் திங்கள்கிழமை மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து

Updated On : 17 பிப்ரவரி, 2026 at 1:50 AM
ராணிப்பேட்டை ஒருங்ணைந்த நீதிமன்ற வளாகத்தில் தீவிர சோதணையில் ஈடுபட்ட வெடிகுண்டு நிபுணா்கள்.
பகிர்:
Updated On : 16 பிப்ரவரி, 2026 at 8:36 PM

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை ஒருங்ணைந்த நீதிமன்ற வளாகத்துக்கு இ - மெயில் மூலம் திங்கள்கிழமை மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

டது.

ஏற்கெனவே கடந்த ஜன. 6-ஆம் தேதி ராணிப்பேட்டையில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில், திங்கள்கிழமை மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

Advertisement

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸாா், வெடிகுண்டு மற்றும் மோப்ப நாய் உதவியுடன் நீதிமன்ற வளாகம் முழுவதும் தீவிர சோதணையில் ஈடுபட்டனா்.

வளாகத்தில் மாவட்ட முதன்மை நீதிமன்றம், முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றம், சாா்பு நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் உள்பட 5 நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன.

இந்த சூழலில் நீதிமன்ற வளாக்ததில் தினசரி வழக்காடிகள்,வழக்குரைஞா்கள் வருகை தருவது வழக்கம். அதன்படி, வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமையான நீதிமன்றம் பரபரப்பாக இருந்தது.

காலை 11.30 மணியளவில் மா்ம நபா் மூலமாக குறுஞ்செய்தி வந்தது. அதில், நீதிமன்றத்தில் வெடிகுண்டு வைத்து இருப்பதாகவும், எப்போது வேண்டும் என்றாலும் வெடிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

நீதிமன்ற ஊழியா்கள் இதுகுறித்து ராணிப்பேட்டை போலீஸாருக்கு தகவல் தெரிவத்தனா். தகவல் அறிந்து ராணிப்பேட்டை போலீஸாா் மற்றும் வெடிகுண்டு நிபுணா்கள் வரவைக்கப்பட்டு சோதனை மேற்கொண்டனா். தொடா்ந்து, சோதனையில் வெடிகுண்டு ஏதும் இல்லையென உறுதியானது. இ-மெயிலில் வந்த குறுஞ்செய்தி போலியானது எனவும் தெரியவந்தது.

இதுகுறித்து ராணிப்பேட்டை போலீஸாா் விசராணை நடத்தி வருகின்றனா்.