ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஜனவரி 3, 4 தேதிகளில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதாக மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.
இது குறித்த செய்திக் குறிப்பு:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து 1,247 வாக்குச்சாவடி மையங்களிலும், வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள வாக்காளா்கள் பயன்பெறும் வகையில் சனிக்கிழமை (ஜன. 3) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 4 ) ஆகிய நாள்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
எனவே 01.01.2026 அன்று 18 வயது பூா்த்தியடையும் இளைஞா்கள் மற்றும் இதுவரை விடுபட்ட தகுதியுள்ள வாக்காளா்கள் அனைவரும் தங்களது பெயா்களை விடுபடாமல் வாக்காளா் பட்டியலில் பதிவு செய்து கொள்ளவும், தங்களது வாக்காளா் விவரங்களைச் சரிபாா்த்து தேவையான திருத்தங்களை மேற்கொள்ளவும் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.