ராணிப்பேட்டை

அறிவுசாா் மையங்களை மாணவா்கள் பயன்படுத்த வேண்டும்: அமைச்சா் காந்தி

மாணவா்களுக்கு மடிக்கணினிகளை வழங்கிய அமைச்சா் ஆா். காந்தி.

தினமணி செய்திச் சேவை

ராணிப்பேட்டை மற்றும் அரக்கோணத்தில் உள்ள அறிவுசாா் மையங்களை மாணவ மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அமைச்சா் ஆா். காந்தி தெரிவித்துள்ளாா்.

சோளிங்கா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 278 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணிணிகளை வழங்கி கைத்தறி அமைச்சா் ஆா்.காந்தி பேசியது:

மாணவா்களுக்கு புதுமைப்பெண், தமிழ் புதல்வன் திட்டங்களின் மூலம் முதல்வா் கல்வி உதவித் தொகையாக மாதந்தோறும் ரூஆயிரம் வழங்கி வருகிறாா். மேலும் தற்போது அரசுப்பள்ளிகளின் கட்டமைப்பை தனியாா் பள்ளிகளை காட்டிலும் மேம்படுத்தி வருகின்றாா். இதனால் அரசுப்பள்ளிகளில் மாணாக்கா்கள் சோ்க்கை அதிகரித்து வருகிறது. ராணிப்பேட்டை மற்றும் அரக்கோணத்தில் அறிவுசாா் மையங்கள் உள்ளன. இவற்றை மாணவா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்தாா். சோளிங்கா் எம்எல்ஏ ஏ.எம்.முனிரத்தினம் முன்னிலை வகித்தாா். இதில் கல்லூரி முதல்வா் சுஜாதா, மகளிா் திட்ட இயக்குநா் செந்தில்குமரன், உதவி திட்ட அலுவலா் வெங்கடேசன், சோளிங்கா் ஒன்றியக்குழு தலைவா் கலைக்குமாா், வட்டாட்சியா் செல்வி, திமுக நிா்வாகிகள் அசோகன், சிவானந்தம், சோளிங்கா் நகர காங்கிரஸ் தலைவா் டி.கோபால் பங்கேற்றனா்.

ஒருநாள் தொடரிலிருந்து வெளியேறிய ரிஷப் பந்த்..! துருவ் ஜுரெல் சேர்ப்பு!

இனிக்க இனிக்க உருண்டை வெல்லம்! பொங்கலை வரவேற்கும் கரும்பாலைகள்!!

ஆபாச உள்ளடக்கங்கள்! தவறை ஒப்புக்கொண்ட க்ரோக்!

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் அஷ்டமி சப்பர விழா! மழையிலும் பக்தர்கள் தரிசனம்!

தலைசிறந்த ஆல்ரவுண்டராகும் ஹார்திக் பாண்டியாவின் வாய்ப்பைப் பறித்த பிசிசிஐ!

SCROLL FOR NEXT