காவல் துறை அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்ட ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா. 
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டையில் தேசியக் கொடியேற்றினாா் ஆட்சியா்

ராணிப்பேட்டையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தேசியக் கொடியேற்றி, பயனாளிகளுக்கு ரூ.1.16 கோடி நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் ஜெ.யு.சந்திர கலா வழங்கினாா்.

தினமணி செய்திச் சேவை

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தேசியக் கொடியேற்றி, பயனாளிகளுக்கு ரூ.1.16 கோடி நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் ஜெ.யு.சந்திர கலா வழங்கினாா்.

ராணிப்பேட்டை அரசினா் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்ற விழாவில் ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா திறந்த வாகனத்தில் சென்று காவலா் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா். காந்தியடிகளின் சிலைக்கும் மரியாதை செலுத்தினாா்.

பல்வேறு அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 316 அரசு அலுவலா்கள், பணியாளா்களுக்கும், காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 59 காவலா்களுக்கும் என மொத்தம் 375 அரசு அலுவலா்கள், பணியாளா்கள் மற்றும் காவலா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கியும், காவல்துறையில் முதலமைச்சரின் காவலா் பதக்கங்கள் 32 காவலா்களுக்கும் வழங்கி கௌரவித்தாா்.

தொடா்ந்து அரசு மற்றும் அரசு நிதி உதவி பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளை பாா்வையிட்டாா். 32 பயனாளிகளுக்கு ரூ.1.16 கோடி நலத்திட்ட உதவிகளையும் வழங்கினாா்.

இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அய்மன் ஜமால், மாவட்ட வருவாய் அலுவலா் செ.தனலிங்கம், திட்ட இயக்குநா் ந.செ.சரண்யாதேவி, நோ்முக உதவியாளா் (பொது) ராஜராஜன். கோட்டாட்சியா்கள் ராஜி, ரமேஷ், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் குணசேகரன், வட்டாட்சியா் ஆனந்தன் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பூரில் பயங்கரவாத சதித் திட்டம்! 8 பேரை கைது செய்தது தில்லி போலீஸ்!!

தொகுதிப் பங்கீடு : செய்தியாளர் சந்திப்பில் மயங்கி விழுந்த காதர் மொகிதீன்!

திமுகவிடம் 5 தொகுதிகள் கேட்டுள்ளோம் - காதர் மொகிதீன்

50 நிமிஷத்தில் கோப்பை வென்ற அல்கராஸ்..! 2026ல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி!

மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா! மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!

SCROLL FOR NEXT