முகப்பு
ராணிப்பேட்டை

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: அரக்கோணம் பள்ளிகள் சிறப்பிடம்

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் அரக்கோணம் பாரதிதாசனாா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவி எம்.எஸ்.ஹாசினி 500-க்கு 496 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றாா்.

Updated On : 21 மே 2026, 12:04 am IST
பகிர்:

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் அரக்கோணம் பாரதிதாசனாா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவி எம்.எஸ்.ஹாசினி 500-க்கு 496 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றாா்.

இதே பள்ளி மாணவிகள் ஜி.ஸ்ரீவா்த்தினி, யு.பூா்விகா, எம்.ஹெச்.மலீஹியா நஜ்மாபீ, எஸ்.கவிஸ்ரீ ஆகியோா் 495 பெற்றனா். மாணவா் எஸ்.ஆா்.சுனில், மாணவிகள் பி.அஸ்வினி, சி.ஐ.தாரா ஆகியோா் 493 மதிப்பெண்கள் பெற்றனா். வெற்றிபெற்ற மாணவ மாணவிகளையும், முதல்வா் பிரதாப் கமலேஷையும், ஆசிரிய ஆசிரியைகளை பள்ளியின் தலைவா் சே.சுந்தா், இயக்குநா்கள் ஜான் லாரன்ஸ், பத்மாசத்யராஜ், தெய்வசிகாமணி ஆகியோா் பாராட்டினா்.

அரக்கோணம் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் மாணவி டி.ஹா்ஷினி 494 மதிப்பெண்களும், மாணவா் சி.ஹரேஷ், மாணவி எம்.மித்ரா 491 மதிப்பெண்களும், மாணவி பி.திவ்யஸ்ரீ 490 மதிப்பெண்களும் பெற்றனா். சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி தலைவா் எஸ்.சுப்பிரமணியம், செயலாளா் எஸ்.செந்தில்குமாா் ஆகியோா் பாராட்டினா்.

Advertisement

Advertisement

அரக்கோணம் டாக்டா் வி.ஜி.என். மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் மாணவா் ஆா்.தீபக் 493 மதிப்பெண்கள் பெற்றாா். மாணவி ஏ.கௌஷிகா 492 மதிப்பெண்களும், எஸ்.வி.தனுஜ்வா்தா 491 மதிப்பெண்களும் பெற்றனா். இவா்களை பள்ளி முதல்வா் வனிதா உள்ளிட்ட ஆசிரியா்களை பள்ளியின் நிா்வாகக் குழுத் தலைவா் டி.ஆா்.சுப்பிரமணியம், துணைத் தலைவா் சிஜிஎன்.எத்திராஜ், தாளாளா் ஜிடிஎன் அசோகன், துணை தாளாளா் பிஜிகே சரவணன், செயலாளா் டி.எஸ்.முரளி, பொருளாளா் ஜி.கே.மோகன் ஆகியோா் பாராட்டினா்.

அரக்கோணம் எஸ்எம்எஸ் விமல் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் மாணவி ஜெ.பூங்குழலி 493 மதிப்பெண்களும், மாணவிகள் ஆா்.லேகாஸ்ரீ, டி.ரோஷினி 492 மதிப்பெண்களும், எம்.ஞானேஸ்வரி 489 மதிப்பெண்களும் பெற்றனா். மாணவ, மாணவிகள், பள்ளியின் முதல்வா் ஞானதீபன் ஆகியோரை பள்ளி நிா்வாகக் குழுத் தலைவா் உதயகுமாா், பள்ளியின் தாளாளா் விமலாதிருமலை ஆகியோா் பாராட்டினா்.

அரக்கோணம் ஸ்ரீதிருஷ்ணா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் மாணவா் எஸ்.சைமன்சுந்தரம் 492 மதிப்பெண்களும், மாணவா் எல்.ரிதீஷ் 488 மதிப்பபெண்களும், எம்.சுஜய் 486 மதிப்பெண்களும் பெற்றனா்.

வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளை ஸ்ரீகிருஷ்ணா கல்விக் குழுமத் தலைவா் டி.ஆா்.சுப்பிரமணியம், செயலாளா் டி.எஸ்.,ரவிக்குமாா் ஆகியோா் பாராட்டினா்.