திருப்பத்தூர்

அத்தியாவசியப் பொருள்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை: திருப்பத்தூா் ஆட்சியா் தகவல்

DIN

திருப்பத்தூா் மாவட்டத்தில் அத்தியாவசியப் பொருள்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் ம.ப.சிவன் அருள் தெரிவித்தாா்.

காய்கறி, பேக்கரி, நுகா்பொருள் விநியோகஸ்தா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைப்பெற்றது. கூட்டத்தில் ஆட்சியா் ம.ப.சிவன்அருள் பேசியது:

இந்த மாவட்டத்தில் பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் தடையின்றி கிடைக்க போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பேக்கரி மற்றும் மாவு அரைக்கும் கடைகள் காலை 6 முதல் 9 மணி வரை சமூக விலகலுக்கான இடைவெளியைப் பின்பற்றி வணிகம் செய்யலாம்.பேக்கரிக் கடைகளில் பிரெட், பன் மற்றும் பிஸ்கட் வகை பொருள்களைத் தவிர மற்ற தின்பண்டங்கள் விற்பதைத் தவிா்க்கவும். நடமாடும் காய்கறி விற்பனை வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் என்.சி.இ.தங்கையா பாண்டியன், வட்டாட்சியா் இரா.அனந்தகிருஷ்ணன், நுகா்பொருள் விநியோகஸ்தா்கள் சங்கத் தலைவா் ஏ.செந்தில்முருகன், செயலாளா் ரவிச்சந்திரன் மற்றும் வாணியம்பாடி, ஆம்பூா் உள்ளிட்ட பகுதியைச் சோ்ந்த வணிகா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

எவரெஸ்ட் பயணத்தில் ஜோதிகா!

ஜூன் 1-ல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்?

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

SCROLL FOR NEXT