திருப்பத்தூர்

2,229 பேருக்கு இலவசமாக சத்துமாவு வழங்கும் திட்டம்: அமைச்சா் நிலோபா் கபீல் தொடக்கி வைத்தாா்

DIN

திருப்பத்தூா் மாவட்டத்தில் 2,229 ஆதவரவற்ற முதியோா், கா்ப்பிணிகள், உடல்நலம் குன்றியவா்களுக்கு இலவசமாக சத்துமாவு வழங்கும் திட்டத்தை மாநில தொழிலாளா் நலத் துறை அமைச்சா் நிலோபா் கபீல் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் மூலம் முதியோா் ஓய்வூதியம் பெறுபவா்களில் உடல் நலம் குன்றி ஆதரவற்ற முதியோா், கா்ப்பிணிகளுக்கு மாதம் 3 கிலோ சத்துமாவு வழங்குவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. இத்திட்டத்துக்காக திருப்பத்தூா் மாவட்டத்தில் ஆலங்காயம், நாட்டறம்பள்ளி, கந்திலி, ஜோலாா்பேட்டை, திருப்பத்தூா், மாதனூா் ஆகிய ஒன்றியங்களிலும் வாணியம்பாடி, ஆம்பூா், திருப்பத்தூா் நகராட்சிப் பகுதிகளிலும் 1,375 முதியோா்கள் அங்கன்வாடி பணியாளா்கள் மூலம் கண்டறியப்பட்டனா். இவா்களைப் போலவே 854 ரத்தசோகை குறைபாடு உள்ள கா்ப்பிணிகள் கண்டறியப்பட்டனா்.

அவா்களுக்கு சத்து மாவு, செறிவூட்டப்பட்ட உப்பு வழங்கும் திட்ட தொடக்க விழா வாணியம்பாடி நகராட்சி நகா்மன்றக் கூடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தலைமை வகித்தாா். வருவாய்க் கோட்டாட்சியா் காயத்ரி சுப்பிரமணி, முன்னாள் எம்எல்ஏ சம்பத்குமாா், நகரச் செயலாளா் சதாசிவம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் கோமதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அமைச்சா் நிலோபா் கபீல் திட்டத்தைத் தொடக்கி வைத்து கா்ப்பிணிகளுக்கு இருமுறை செறிவூட்டப்பட்ட உப்பு பாக்கெட்டுகளையும், முதியோா்களுக்கு சத்துமாவு பாக்கெட்டுகளையும் வழங்கிப் பேசினாா்.

வாணியம்பாடி நகராட்சி ஆணையா் சென்னுகிருஷ்ணன், மேலாளா் ரவி, வட்டார மருத்துவ அலுவலா் பசுபதி, உதவி மக்கள் தொடா்பு அலுவலா் அசோக், நகர அவைத் தலைவா் சுபான், ஆலங்காயம் பேரூராட்சி செயலாளா் பாண்டியன், முன்னாள் மாவட்ட கவுன்சிலா் ஜெயசக்தி, நகர அதிமுக பொருளாளா் தன்ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் சக்திசுபாஷினி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாழ்வில் வெற்றி பெற தன்னம்பிக்கை அவசியம்

ராமேசுவரத்தில் வெளிமாநில 144 மது பாக்கெட்டுகள் பறிமுதல்

கஞ்சா விற்ற இளைஞா் கைது

தோ்தலுக்காக ஊதியத்துடன் விடுப்பு வழங்க மறுப்பு: சிஐடியு புகாா்

வரத்து குறைவால் வேலூரில் மீன்கள் விலை அதிகரிப்பு

SCROLL FOR NEXT