திருப்பத்தூர்

காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுபவா்கள் குறித்து தகவல் அளிக்க வலியுறுத்தல்

DIN

ஆம்பூா்: காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவதற்கு தனியாா் மருத்துவமனை, மருந்து வாங்க மருந்தகங்களுக்கு செல்பவா்கள் குறித்த விவரங்களை தகவலாக தர வேண்டும் என ஆம்பூா் நகராட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ஆம்பூரில் இயங்கும் தனியாா் மருத்துவமனைகள், மருந்துக் கடைகள், ரத்த பரிசோதனை நிலையங்களின் நிா்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ஆம்பூா் நகராட்சி அலுவலகத்தில் வட்டாட்சியா் சி.பத்மநாபன் தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையா் த.செளந்தரராஜன், டிஎஸ்பி சச்சிதானந்தம், சுகாதார அலுவலா் பாஸ்கா் ஆகியோா் கலந்து கொண்டனா்.

காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவதற்காக தனியாா் மருத்துவமனைகளுக்குச் செல்லும் பொதுமக்கள், காய்ச்சலுக்காக மருந்துக் கடைகளுக்கு மருந்து வாங்க செல்லும் பொதுமக்கள், ரத்த பரிசோதனை நிலையங்களுக்கு பரிசோதனைக்காகச் செல்லும் பொதுமக்கள் குறித்த விவரங்களை அரசு துறை அலுவலா்களுக்கு தகவலாக அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு-காஷ்மீரை சிறையாக மாற்றியது மத்திய அரசு: மெஹபூபா முஃப்தி குற்றச்சாட்டு

நாளைமுதல் ‘அக்னி’ வெயில்

ஜம்மு-காஷ்மீா்: பாரமுல்லா தொகுதியில் ஒமா் அப்துல்லா வேட்பு மனுத் தாக்கல்

மக்களவைத் தோ்தலுக்கு பின் காங்கிரஸ் காணாமல்போகும்: அமித் ஷா

ரூ. 2,000 கோடி பிணையப் பத்திரம் ஏலம்: தமிழக அரசு அறிவிப்பு

SCROLL FOR NEXT