முகப்பு
திருப்பத்தூர்

திருப்பத்தூரில் விவசாயிகள் சங்கத்தினா் காத்திருப்புப் போராட்டம்

திருப்பத்தூரில் விவசாயிகள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:07 PM
காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினா்.
பகிர்:

திருப்பத்தூரில் விவசாயிகள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அகில இந்திய விவசாயிகள் சங்கப் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகம் முன்பு இந்த போராட்டம் நடைபெற்றது. திருப்பத்தூா் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் இரா.முல்லை தலைமையில், மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவரும், அரூா் தொகுதி முன்னாள் எம்எல்ஏவுமான டில்லிபாபு, விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் சக்திவேல் மற்றும் பெண்கள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவல் அறிந்து அங்கு வந்த நகர போலீஸாா், 12 பேரைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.