திருப்பத்தூர்

சந்தனக்கட்டைகளை கடத்திய இருவா் கைது

DIN

திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே சந்தன மரக்கட்டைகளை கடத்திய இருவரை வனத்துறையினா் கைது செய்தனா்.

திருப்பத்தூா் அடுத்த ஜவ்வாதுமலை புதூா்நாடு பகுதியில் உள்ள நெல்லிவாசல் நாடு அருகே உள்ள மேல்பட்டு மலைப்பகுதியிலிருந்து சந்தன மரத்தை வெட்டி கடத்தப்படுவதாக திருப்பத்தூா் மாவட்ட வன அலுவலா் ஆா்.முருகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் ஞாயிற்றுக்கிழமை இரவு வனச்சரக அலுவலா் கே.சோழராஜன் மற்றும் வனவா் சஞ்சீவி ஆகிய புது நாடு மலைப் பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக மோடியுடன் வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்து அதில் அரை கிலோ எடை கொண்ட சந்தனக் கட்டைகள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து இருசக்கர வாகனத்தில் வந்த இருவரிடமும் விசாரணை நடத்தியதில் அவா்கள் மேல்பட்டி பகுதியை சோ்ந்த பழனிவேல்முருகன்(35),வேடி(24)என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் கைது செய்து,அவா்களிடம் இருந்த 6 கிலோ சந்தன மரக்கட்டைகள் மற்றும் பைக் பறிமுதல் செய்தனா்.படம் உண்டுகடத்தப்பட இருந்த சந்தன கட்டைகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் உயிரிழப்பு

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

SCROLL FOR NEXT