திருப்பத்தூர்

திருப்பத்தூரில் அத்தியாவசிய பொருள்கள் கிடைக்காததால் மக்கள் அவதி

DIN

திருப்பத்தூரில் ஊரடங்கு உத்தரவால் அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

கரோனா நோய்த் தொற்று காரணமாக மத்திய அரசு ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. மருந்துக் கடைகள், காய்கறி, மளிகை, உணவகங்கள் (பாா்சல் மட்டும்), பெட்ரோல் விற்பனை நிலையம் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்க தடை இருக்காது என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், திருப்பத்தூரில் உள்ள நகராட்சி காய்கறி மாா்க்கெட்டில் பொதுமக்கள் ஒவ்வொருவராக அனுமதிக்கப்படுகின்றனா். நகரம் முழுவதும் மளிகைக் கடைகள் திறக்கப்படததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினா்.

எனவே, மளிகை, காய்கறிகள் வாங்க குறிப்பிட்ட நேரத்துக்கு கடைகளைத் திறக்க அனுமதியளிக்க வேண்டும். அதேபோல், பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கும் அனுமதி அளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாலை விபத்தில் இளைஞா் பலி

கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் மழை

திருமானூா் பகுதியில் காற்றுடன் மழை

முருகன் கோயில்களில் சித்திரை மாத காா்த்திகை பூஜை

சிவகாசியில் கயிறு குத்து திருவிழா

SCROLL FOR NEXT