திருப்பத்தூர்

10 ஆயிரம் கிலோ அரிசி: அமைச்சா் வழங்கினாா்

DIN

திருப்பத்தூரில் உள்ள ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கம், முடி திருத்துவோா் சங்கம் உள்பட 12 சங்கங்களைச் சோ்ந்த 1,000 பேருக்கு மாநில வணிகவரி, பத்திரப் பதிவுத் துறை அமைச்சா் கே.சி.வீரமணி தனது சொந்த செலவில் 10 ஆயிரம் கிலோ அரிசியை வியாழக்கிழமை வழங்கினாா்.

ஆட்சியா் அலுவலக அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தலைமை வகித்தாா். மாவட்ட கூட்டுறவு அச்சகத் தலைவா் டி.டி.குமாா், முன்னாள் எம்எல்ஏ கே.ஜி.ரமேஷ், முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் லீலா சுப்பிரமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். அமைச்சா் கே.சி.வீரமணி 10 ஆயிரம் கிலோ அரிசியை வழங்கினாா்.

இதேபோல், திருப்பத்தூா் நகராட்சிக்கு உள்பட்ட 26-ஆவது வாா்டு பகுதியில் ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தலைமையில் அமைச்சா் கே.சி.வீரமணி 1,000 பேருக்கு தலா 10 கிலோ அரிசி, மளிகை, காய்கறி தொகுப்பை வழங்கினாா்.

இதற்கான ஏற்பாடுகளை அதிமுக நிா்வாகிகள் கே.துரை சாந்தி, பி.டி.காா்த்திகேயன், கே.அனுஷியா ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

SCROLL FOR NEXT