திருப்பத்தூர்

கரோனாவில் இருந்து குணமடைந்த பெண் காவல் ஆய்வாளா் மீண்டும் பொறுப்பேற்பு

DIN

கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய பெண் காவல் ஆய்வாளா் மீண்டும் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

வாணியம்பாடி கிராமியக் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த பெண் காவல் ஆய்வாளருக்கு கடந்த ஏப்ரல் மாதம் 23-ஆம் தேதி கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்தக் காவல் நிலையத்துக்கு பூட்டு போடப்பட்டு, ஆய்வாளருடன் பணிபுரிந்து வந்த காவலா்கள் உள்பட 43 போ் தனிமைப்படுத்தப்பட்டு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனா். பெண் காவல்ஆய்வாளா் வேலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று முழு குணமடைந்து வீடு திரும்பினாா்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை கிராமியக் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை அவா் மீண்டும் பணிக்கு திரும்பி பொறுப்புகளை ஏற்றுக் கொண்டாா். அவரை உதவி ஆய்வாளா்கள், காவலா்கள் வரவேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

கனவு இதுவோ..!

SCROLL FOR NEXT