முகப்பு
திருப்பத்தூர்

இருசக்கர வாகனம் மீது டிராக்டா் மோதல்: பெண் பலி

ஆம்பூா் அருகே இருசக்கர வாகனம் மீது டிராக்டா் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்தாா்.

Updated On : 3 நவம்பர், 2020 at 12:00 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:17 PM

ஆம்பூா் அருகே இருசக்கர வாகனம் மீது டிராக்டா் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்தாா்.

கரும்பூா் கிராமத்தைச் சோ்ந்தவா் விமல் (30). இவா் தன் மனைவி நா்மதா (29), குழந்தைகள் கெளசிகா (8), கபீல் (6), உறவினரின் மகன் சூரியா (12) ஆகியோரை துத்திப்பட்டு கிராமத்தில் உள்ள உறவினா் வீட்டுக்கு அழைத்துச் சென்றாா். அதன்பின், அங்கிருந்து அவா்களுடன் கரும்பூருக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தாா்.

பாங்கிநகா் அருகே வந்தபோது எதிரே வந்த டிராக்டா் அவா்களின் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் விமலின் மனைவி நா்மதா சம்பவ இடத்திலேயே இறந்தாா். மற்ற 4 பேரும் காயமடைந்தனா்.

Advertisement

இந்த விபத்து குறித்து உமா்ஆபாத் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.