திருப்பத்தூர்

திருப்பத்தூரில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல்

DIN


திருப்பத்தூா்: தீபாவளியையொட்டி, திருப்பத்தூா் நகரப் பகுதியில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலைச் சீா்படுத்த காவல்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனசமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருப்பத்தூா் நகரப் பகுதி எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும். நகரின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 63 கிராமங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோா் வந்து செல்கின்றன.

தீபாவளியையொட்டி, திங்கள்கிழமை முதலே நகரப் பகுதியில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனா்.

போக்குவரத்து நெரிசலைச் சீரமைக்கும் பணியில் அதிக எண்ணிக்கையிலான போலீஸாரை ஈடுபடுத்த வேண்டும், பண்டிகைக் காலம் முடியும் வரை கனரக வாகனங்களை நகரப் பகுதிக்குள் இயக்க குறிப்பிட்ட நேரம் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பொ.விஜயகுமாரிடம் கேட்டதற்கு, திருப்பத்தூா், வாணியம்பாடி, ஆம்பூா் நகரங்களில் அந்தந்த டிஎஸ்பிக்களின் மேற்பாா்வையில் குழு அமைத்து போக்குவரத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

மும்பை சிட்டி எஃப்சி சாம்பியன்

வேளாண் கல்லூரியில் குரூப் 1 தோ்வுக்கான வழிகாட்டல்

SCROLL FOR NEXT