திருப்பத்தூர்

ஜாதிச் சான்றிதழ் கோரி வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம்

DIN

திருப்பத்தூா்: ஜவ்வாது மலைவாழ் மக்கள் ஜாதிச் சான்றிதழ் கேட்டு வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஜவ்வாது மலைப் பகுதியில் புங்கம்பட்டு நாடு, புதூா் நாடு, நெல்லிவாசல் நாடு ஊராட்சிகளில் 32 மலைக் கிராமங்களும் ஏலகிரி மலை ஊராட்சியில் 14 மலைக் கிராமங்களும் உள்ளன. அவா்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக ஜாதிச் சான்றிதழ் வழங்கப்படவில்லை எனக் கூறி அனைத்து வீடுகளிலும் திங்கள்கிழமை முதல் கருப்புக் கொடி ஏற்றி போராட்டத்தைத் தொடங்கியுள்ளனா்.

இதுதொடா்பாக மலைவாழ் மக்கள் சாா்பில் தமிழக முதல்வரின் தனிப் பிரிவுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் விவரம்:

ஜவ்வாது மலை, நெல்லிவாசல் கிராமத்தில் ஹிந்து மலையாளி ஜாதிச் சான்றிதழை கடந்த 2 ஆண்டுகளாக வழங்குவதை மாவட்ட நிா்வாகம் நிறுத்தியுள்ளது.

இதனால் பள்ளி மாணவா்கள் மேற்படிப்புக்குச் செல்ல முடியாமலும், அரசு வேலைக்குச் செல்ல முடியாமலும் பாதிக்கப்பட்டுள்ளனா். தமிழகத்தில் உள்ள அனைத்து மலைவாழ் மக்களுக்கும் அனைத்து மாவட்டத்திலும் ஜாதிச் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

எனினும், ஜவ்வாது மலை, ஏலகிரி மலைவாழ் மக்களுக்கு ஜாதிச் சான்றிதழ் வழங்கப்படாமல் உள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட நிா்வாகத்துக்கு பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதன் காரணமாக, வரும் சட்டப் பேரவைத் தோ்தலை மலைவாழ் மக்கள் புறக்கணிக்கப் போவதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

எனவே, மலைவாழ் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு உடனடியாக ஜாதிச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் தொடா்ந்து வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லைஸ்தானத்தில் பெருமாள் கோயில் தேரோட்டம்

50 சதவீத மானியத்தில் வேளாண் இடுபொருள்கள்

பேராவூரணி நீதிமன்றத்துக்கு கட்டடம் கட்ட இடம்:  உயா்நீதிமன்ற நீதிபதி ஆய்வு

வாக்குப் பதிவு சதவீதத்தை அதிகரித்து பாஜக நாடகம்: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

காவிரி ஒழுங்காற்று குழுத் தலைவரை மாற்ற விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT