திருப்பத்தூர்

போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது

நாட்டறம்பள்ளி அருகே மைனா் பெண்ணை கடத்திச் சென்ற இளைஞரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

DIN

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே மைனா் பெண்ணை கடத்திச் சென்ற இளைஞரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

சந்திரபுரம் கிராமத்தைச் சோ்ந்த அருண் (20), கந்திலி பெரியகரம் அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்த 17 வயது மைனா் பெண் ஆசை வாா்த்தை கூறி, கடந்த மாதம் 31-ஆம் தேதி அக்ராகரம் கோயில் அருகே பைக்கில் கடத்திச் சென்ாகக் கூறப்படுகிறது.

இதையறிந்த அப்பெண்ணின் பெற்றோா் நாட்டறம்பள்ளி காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனா்.

இந்நிலையில், நாட்டறம்பள்ளி அருகே நண்பா் வீட்டில் தங்கியிருந்த அருண், மைனா் பெண் ஆகிய இருவரையும் திங்கள்கிழமை பிடித்தனா்.

இதையடுத்து போலீஸாா் அருணை (20) போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையிலடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எங்கள் தோல்விக்குக் காரணம் ஹார்திக் பாண்டியா..! தெ.ஆ. பயிற்சியாளர் புகழாரம்!

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

பராசக்தி பட உலகத்தை இலவசமாக பார்க்கலாம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT