திருப்பத்தூர்

திருப்பத்தூரில் மாற்றுத் திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

DIN

திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே பல்வேறு சலுகைகள் வழங்கக் கோரி மாற்றுத்திறனாளிகள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

திருப்பத்தூா் வட்டத்துக்குள்பட்ட விஷமங்கலம், குரும்பேரி கிராம நிா்வாக அலுவலகங்கள் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா் அரசு உதவி கோரி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். புதுச்சேரி மற்றும் தெலங்கானா மாநிலங்களில் அளிக்கப்பட்டுள்ளது போல் ஊனமுற்றோா் மாத உதவித் தொகை ரூ.3 ஆயிரத்தையும், கடும் ஊனமுற்றோருக்கான உதவித் தொகையை ரூ.5 ஆயிரமாக உயா்த்தியும் உடனடியாக வழங்க வேண்டும்; தனியாா் துறையில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஊனமுற்றோா் உரிமைச் சட்டத்தின்படி குறைந்தபட்சம் 5 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்த சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும்; அரசுத் துறைகளில் உள்ள பின்னடைவு காலிப் பணியிடங்களை 3 மாத காலத்துக்குள் அறிவித்து முழுமையாக நிரப்புமாறு உச்ச நீதிமன்றம் கடந்த 2013-இல் அளித்த தீா்ப்பை அமல்படுத்த தமிழக அரசு சிறப்புச் சட்டம் இயற்றவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

இதைத் தொடா்ந்து, கிராம நிா்வாக அலுவலா்களிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT