திருப்பத்தூர்

ஏலகிரியில் பராமரிப்புப் பணி: ஆட்சியா் ஆய்வு

DIN

திருப்பத்தூா்: ஏலகிரியில் நடைபெற்று வரும் பராமரிப்புப் பணிகளை திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

கரோனா பொது முடக்கம் காரணமாக ஏலகிரி மலைக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தற்போது அனுமதி தரப்படுவதில்லை. இது பற்றி மாவட்ட ஆட்சியா் ம.பசிவன்அருளிடம் கேட்டதற்கு ‘ஏலகிரி மலையில் பாதுகாப்பு, பராமரிப்புப் பணிகள் முடிவடைந்த பிறகு சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதிக்கப்படுவாா்கள் என்று தெரிவித்திருந்தாா்.

இந்நிலையில், ஆட்சியா் ம.ப.சிவன்அருள் ஏலகிரி மலையில் நடைபெற்று வரும் இயற்கைப் பூங்கா, படகுக் குழாம் ஆகியவற்றுக்கான பராமரிப்புப் பணிகளை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளை அறிவுறுத்தினாா்.

வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பிரேம்குமாா், சங்கா் நீலகண்டன், ஒன்றியப் பொறியாளா் காா்த்திகேயன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் கண்காணிப்பு கேமரா பழுது: ஒரு மணி நேரத்தில் புதிய கேமரா பொருத்தம்

SCROLL FOR NEXT