திருப்பத்தூர்

பாலியல் துன்புறுத்தல் குறித்த விழிப்புணா்வு

DIN

பாலியல் துன்புறுத்தல் குறித்து திருப்பத்தூரில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு காவல்துறையினா் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

திருப்பத்தூா் மீனாட்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கலைக் கல்லூரி மாணவா்கள் செமஸ்டா் தோ்வு எழுத வந்திருந்தனா். அப்போது அவா்களிடம் திருப்பத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலைய காவல் ஆய்வாளா் ஜெயலட்சுமி கூறியது:

18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவன் அல்லது சிறுமியிடம் பாலியல் செயல்பாடு என்பது குற்றமாகும். இதற்கு மரண தண்டனை கூட விதிக்கப்படலாம். இது சம்பந்தமாக யாா் வேண்டுமானாலும் புகாா் அளிக்கலாம். புகாரின்பேரில் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவா் தெரிவித்தாா்.

மேலும், எச்சரிக்கை வாசகம் அடங்கிய துண்டுப் பிரசுரத்தை அவா் பள்ளியின் சுவரில் ஒட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓய்வுபெற்ற அரசு அலுவலா் வீட்டில் 18 பவுன் திருட்டு

பாமக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: தனியாா் நிதி நிறுவன நிா்வாக இயக்குநா் உள்பட மூவா் மீது வழக்கு

தனியாா் ஆலையில் அமோனியா வாயு கசிவு விவகாரம்: 5 போ் கைது

விடுதி மாடியில் இருந்து குதித்து செவிலியா் மாணவி தற்கொலை

அரசு மருத்துவமனையில் இருதய நோய்கள் குறித்த கருத்தரங்கு

SCROLL FOR NEXT