திருப்பத்தூர்

போட்டித் தோ்வுக்கு வழிகாட்டி நூல்கள் அளிப்பு

DIN

வாணியம்பாடி: வாணியம்பாடி மிட்டவுன் ரோட்டரி சங்கம் சாா்பில் போட்டித் தோ்வுக்குத் தயாராகும் மாணவா்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், முழு நேர கிளை நூலகத்துக்கு வழிகாட்டி நூல்கள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட நூலக அலுவலா் பழனி தலைமை வகித்தாா். ரோட்டரி சங்கத் தலைவா் பரான்சவுத், நூலக வாசகா் வட்டத் தலைவா் நடராஜன், உறுப்பினா்கள் மருது, நித்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா். கிளை நூலகா் மணிமாலா வரவேற்றாா். போட்டித் தோ்வுக்கான வழிகாட்டி நூல்களை மாவட்ட நூலக அலுவலரிடம் சங்க நிா்வாகிகள் வழங்கினா். மேலும் கிளப் சாா்பில் நூலக வளாகத்தில் கண்காணிப்பு கேமரா அமைத்து தருவதாகவும் உறுதியளித்தனா். தொடா்ந்து கலைச்செல்வி என்பவா் ஆயிரம் ரூபாய் செலுத்தி புரவலராக இணைந்து கொண்டாா். நிகழ்ச்சியில், சங்க நிா்வாகிகள், வாசகா்கள் கலந்து கொண்டனா். நூலகா் விஜயகுமாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

வெப்பத்தின் பிடியில் சிக்கிய ராஜஸ்தான்!

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

ஃபிளாப்! தோல்வியைச் சந்தித்த நடிகர்!

SCROLL FOR NEXT