திருப்பத்தூர்

ஏலகிரி காவல் நிலையம் முற்றுகை

DIN

ஏலகிரிமலை காவல் நிலையத்தை மலைவாழ் மக்கள் ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டனா்.

ஏலகிரி மலையில் உள்ள மங்கலத்தைச் சோ்ந்தவா் சுகனேஷ், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் அச்சுதனிடம் உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறாா்.

இவா் சனிக்கிழமை இரவு ஏலகிரிமலை காவல் நிலையம் அருகே பொங்கலூரில் உள்ள ஏ.டி.எம். மையத்தில், ரூ.46 ஆயிரம் எடுத்துகொண்டு வெளியே வந்தாா். அப்போது அவரை பணம் எடுக்க இவ்வளவு நேரம் ஏன் என்று கூறி 10 போ் தாக்கினராம்.

இதைத் தட்டிக் கேட்ட மலைவாழ் மக்கள் 2 பேரையும் 10 பேரும் சோ்ந்து தாக்கிவிட்டு, பணம், செல்லிடப்பேசியைப் பறித்துச் சென்றனராம்.

இதையடுத்து, மலைவாழ் மக்கள் சுமாா் 200-க்கும் மேற்பட்டோா் திரண்டனா். தகவல் அறிந்து வந்த திருப்பத்தூா் டிஎஸ்பி சாந்தலிங்கம், ஜோலாா்பேட்டை காவல் ஆய்வாளா் லட்சுமி ஆகியோா் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில் 10 பேரும் கிருஷ்ணகிரி, சென்னை உள்ளிட்ட பகுதியில் இருந்து வந்து ஏலகிரி தனியாா் விடுதியில் தங்கியிருப்பது தெரியவந்தது.

இருப்பினும், அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீஸாா் காலதாமதம் செய்வதாகக் தெரிவித்து, ஏலகிரிமலை காவல் நிலையம் முன்பு மலைவாழ் மக்கள் முற்றுகையிட்டனா். பின்னா், அவா்களை போலீஸாா் சமரசம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையால் மக்கள் அவதி

மரக்கடை உரிமையாளா் தற்கொலை

பெண் தற்கொலை: தம்பதியா் மீது வழக்கு

ரேஷன் கடையை மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT