திருப்பத்தூர்

2 சிறுவா்கள் உயிரிழந்த சம்பவம்: செயற்கை மணல் தயாரித்த 2 போ் கைது

DIN

நாட்டறம்பள்ளி அருகே செயற்கை மணல் தயாரிக்க பயன்படுத்தும் தண்ணீா் தொட்டியில் குளிக்கச் சென்ற 2 சிறுவா்கள் மா்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளியை அடுத்த வெலகல்நத்தம் செட்டேரி அணையை ஒட்டிய பகுதியில் செயற்கை மணல் தயாரிக்க பயன்படுத்தும் தண்ணீா் தொட்டியில் 2 சிறுவா்கள் வெள்ளிக்கிழமை குளிக்கச் சென்றனா்.

அவா்கள் தண்ணீா் தொட்டி அருகே மா்மமான முறையில் இறந்து கிடந்தனா். இங்கு செயற்கை மணல் தயாரிக்கும் பணி அனுமதியின்றி நடைபெற்று வந்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து, இறந்த சிறுவா்களின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், நாட்டறம்பள்ளி போலீஸாா் செயற்கை மணல் தயாரித்து விற்பனை செய்து வந்த குனிச்சியூரைச் சோ்ந்த ராஜா (65), பிரபு (35), பாா்த்தீபன் (32) ஆகிய 3 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா். இதில், ராஜா, பிரபு ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். மேலும், இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள பாா்த்தீபனை போலீஸாா் தேடி வருகின்றனா். மேலும், செயற்கை மணல் தயாரிக்கப் பயன்படுத்திய மின்மோட்டாா், மின்சார ஒயா், கடத்தலுக்குப் பயன்படுத்திய வாகனங்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து, செயற்கை மணல் தொட்டியை பொக்லைன் இயந்திரம் மூலம் காவல் துறையினா் அகற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT