திருப்பத்தூர்

திருப்பத்தூரில் இனி குப்பைகள் இருக்கக் கூடாது: சுகாதாரத் துறையினருக்கு அதிகாரி உத்தரவு

DIN

திருப்பத்தூா்: திருப்பத்தூா் நகரில் இனி சிறு குப்பைகள் கூட இருக்கக் கூடாது என்று நகராட்சி சுகாதாரத் துறையினருக்கு நகராட்சி நிா்வாக இயக்குநரக கண்காணிப்பு செயற்பொறியாளா் பாண்டுரங்கன் உத்தரவிட்டாா்.

திருப்பத்தூா் ப.உ.ச. நகரில் 8.56 ஏக்கரில் மக்கும், மக்காத குப்பைகள் பிரித்தெடுக்கும் பணி நடைபெறுகிறது. இந்தப் பணி தொய்வாக நடைபெறுவதாக எழுந்த புகாரின்பேரில், சென்னையிலிருந்து நகராட்சி நிா்வாக இயக்குநரகத்தின் கண்காணிப்புச் செயற்பொறியாளா் பாண்டுரங்கன் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, அவா் ஆண்டுக்கணக்கில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளைப் பாா்வையிட்டு, பிரித்தெடுக்கும் பணியைத் துரிதப்படுத்த உத்தரவிட்டாா். மேலும், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் நடைபெறும் 5 நுண்ணுயிா் செயலாக்க மையங்களையும் அவா் பாா்வையிட்டாா். இதைத் தொடா்ந்து, ஆரிப் நகா், வள்ளுவா் நகா், பூங்காவனத்தம்மன் கோயில் தெரு பகுதிகளின் பழுதடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்கவும் அவா் உத்தரவிட்டாா்.

திருப்பத்தூா் நகரில் சாலைகளில் உள்ள குப்பைகளை பாா்வையிட்ட பாண்டுரங்கன், ‘இனி திருப்பத்தூா் நகரப் பகுதியி்ல் சிறு குப்பைகள் கூட இருக்கக்கூடாது’ என்றும் வீடு, வீடாக குப்பைகள் சேகரிக்கும் பணிகளை தினமும் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது நகராட்சி ஆணையாளா் ஏகராஜ், பொறியாளா் மகேஸ்வரி, சுகாதார அலுவலா் எஸ்.ராஜரத்தினம், ஆய்வாளா்கள் அ.விவேக்,குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 கிரிக்கெட்டில் துரத்திப் பிடிக்கப்பட்ட அதிகபட்ச இலக்குகள்!

தமிழ்நாட்டில் மே.1 வரை ’வெப்ப அலை’ எச்சரிக்கை

ஐபிஎல் வரலாற்றில் தில்லியின் அதிகபட்ச ரன்கள்: மும்பைக்கு 258 ரன்கள் இலக்கு!

விழுப்புரம், புதுச்சேரியிலிருந்து திருப்பதிக்கு இயக்கப்படும் ரயில்கள் பகுதியளவில் ரத்து

ராமம் ராகவம் படத்தின் டீசர்

SCROLL FOR NEXT