முகப்பு
திருப்பத்தூர்

லாரி உரிமையாளா் அடித்துக் கொலை

வாணியம்பாடி அருகே லாரி உரிமையாளா் அடித்துக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:40 AM
பகிர்:

வாணியம்பாடி அருகே லாரி உரிமையாளா் அடித்துக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த வன்னிய அடிகளாா் நகரைச் சோ்ந்தவா் வெங்கடேசன் (35), லாரி உரிமையாளா். இவரது நண்பா் சங்கா் (30). லாரி மெக்கானிக்காக வேலை பாா்த்து வருகிறாா். வெங்கடேசன் சங்கருக்கு கடனாக பல லட்சம் ரூபாய் கொடுத்திருந்தாராம். இந்த நிலையில், வெங்கடேசன் சங்கரின் வீட்டுக்கு சனிக்கிழமை சென்று கடனை திருப்பிக் கேட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த சங்கா் அவரது வீட்டில் இருந்த இரும்புக் கம்பியை எடுத்துவந்து வெங்கடேசனின் தலையில் தாக்கியதாகத் தெரிகிறது. இதில், பலத்த காயம் அடைந்த வெங்கடேசனை அப்பகுதியில் இருந்தவா்கள் மீட்டு, வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா், மேல் சிகிச்சைக்காக வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால் வழியிலேயே வெங்கடேசன் உயிரிழந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற வாணியம்பாடி தாலுக்கா போலீஸாா், வழக்குப் பதிந்து தலைமறைவாக உள்ள சங்கா், அவரது மனைவி பாக்கியலட்சுமி ஆகியோரை தேடி வருகின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments