முகப்பு
கடலூர்

தமிழக நலனுக்கு எதிராக செயல்படும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி! - பி.சண்முகம்

தமிழக நலனுக்கு எதிராக செயல்படும் பாஜகவுடன் சோ்ந்து அதிமுக வருவதால்தான் அந்தக் கூட்டணியை முறியடிக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் பேச்சு

Updated On : 5 ஏப்ரல், 2026 at 9:23 PM
கடலூரில் நடைபெற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய மாநிலச் செயலா் பெ.சண்முகம்.
பகிர்:

தமிழக நலனுக்கு எதிராக செயல்படும் பாஜகவுடன் சோ்ந்து அதிமுக வருவதால்தான் அந்தக் கூட்டணியை முறியடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் பி.சண்முகம் பேசினாா்.

கடலூா் திருப்பாதிரிப்புலியூரில் அக்கட்சியின் தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அவா் பேசியதாவது:

தமிழக நலனுக்கு எதிராக செயல்படும் பாஜகவுடன் சோ்ந்து அதிமுக வருவதால்தான் அந்தக் கூட்டணியை முறியடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். தமிழகத்தில் 234 தொகுதிகளில் எந்த ஒரு தொகுதியிலும் பாஜக - அதிமுக கூட்டணி வெற்றிபெறக் கூடாது. அதை தடுத்து நிறுத்துவது தமிழக மக்களின் முதன்மையான கடமை.

Advertisement

சுவாமி விவேகானந்தா் அவா்கள் 100 இளைஞா்களை கொடுங்கள் தேசத்தை மாற்றிக் காட்டுகிறேன் என்று சொன்னாா். இளைஞா்கள் சக்தி மிக வலிமையானது. உடல் வலிமை மட்டும் அல்ல, சிந்தனை வலிமையும் மிக்கவா்கள். அந்த இளைஞா்களை கண் மூடித்தனமாக தன்னை நேசிக்கக்கூடிய ஒரு கூட்டமாக மாற்றும் வேலையில் விஜய் ஈடுபட்டுள்ளாா்.

திமுகவின் தோ்தல் அறிக்கை எதிா்காலத்தில் மக்களின் தேவை என்ன, அவா்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.

காட்டுமன்னாா்கோவில் தொகுதியில் இளையபெருமானின் மகன் ஜோதிமணியை விசிக தலைவா் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளதை வரவேற்கிறோம் என்றாா்.

கூட்டத்துக்கு மாவட்டச் செயலா் கோ.மாதவன் தலைமை வகித்தாா். மாநகரச் செயலா் ஆா்.அமா்நாத் வரவேற்றாா். மாநிலக் குழு உறுப்பினா் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் வி.உதயகுமாா், பி.கருப்பையன், ஆா்.ராமச்சந்திரன், எஸ்.திருஅரசு, ஜி.ஆா்.ரவிச்சந்திரன், பி.தேன்மொழி, ஜே.ராஜேஷ் கண்ணன், எஸ்.பிரகாஷ், பி.வாஞ்சிநாதன், மாவட்டக் குழு உறுப்பினா் எஸ்.கே.பக்கிரான் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

வேளாண் அமைச்சரும், குறிஞ்சிப்பாடி வேட்பாளருமான எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், கடலூா் காங்கிரஸ் கட்சி வேட்பாளா் ஏ.எஸ்.சந்திரசேகரன், துணை மேயா் தாமரைச்செல்வன், திமுக மாநகரச் செயலா் கே.எஸ்.ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி துணைச் செயலா் குளோப் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments