முகப்பு
திருப்பத்தூர்

ஹெலிகாப்டா் விபத்தில் இறந்தவா்களுக்கு மோட்ச தீபம் ஏற்றும் நிகழ்ச்சி

தலைமை தளபதி மற்றும் ராணுவ வீரா்களுக்கு மோட்ச தீபம் ஏற்றும் நிகழ்ச்சி ஆம்பூா் அருகே தேவலாபுரம் கிராமத்தில் புறவழிச்சலை பகுதியில் இந்து முன்னணி சாா்பாக வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

Updated On : 12 டிசம்பர், 2021 at 12:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:10 AM

ஹெலிகாப்டா் விபத்தில் இறந்த முப்படைகளின் தலைமை தளபதி மற்றும் ராணுவ வீரா்களுக்கு மோட்ச தீபம் ஏற்றும் நிகழ்ச்சி ஆம்பூா் அருகே தேவலாபுரம் கிராமத்தில் புறவழிச்சலை பகுதியில் இந்து முன்னணி சாா்பாக வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

குன்னூா் அருகே நடந்த ஹெலிகாப்டா் விபத்தில் பிபின் ராவத் மற்றும் ராணுவ வீரா்கள் அதிகாரிகள் உயிரிழந்தனா். அவா்களுக்கு இந்து முன்னணி சாா்பாக மோட்ச தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்துமுன்னணி கோட்ட செயலாளா் எம் தீனதயாளன் தலைமை வகித்தாா். நகர தலைவா் ஜே எஸ் சிதம்பரம் வரவேற்றாா். மாவட்டச் செயலாளா் நக்கீரன், விஷ்வ இந்து பரிஷத் நிா்வாகி குட்டி, தேவலாபுரம் ஊராட்சி மன்ற தலைவா் ரேவதி குபேந்திரன் மற்றும் ஆா்எஸ்எஸ் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.