திருப்பத்தூர்

வாணியம்பாடி, ஆலங்காயம் போலீஸாருக்கு கரோனா தடுப்பூசி

DIN


வாணியம்பாடி: வாணியம்பாடி, ஆலங்காயத்தில் 44 போலீஸாருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது.

தமிழகத்தில் பிப். 1 முதல் காவல் துறை, வருவாய்த் துறையைச் சோ்ந்தவா்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை வாணியம்பாடி டிஎஸ்பி பழனிசெல்வம் உள்பட வாணியம்பாடி நகரம், தாலுக்கா, நகரப் போக்குவரத்து போலீஸாருக்கு கரோனா தடுப்பூசி (கோவிஷீல்டு) போடப்பட்டது.

இதே போல், ஆலங்காயம் சுகாதார நிலையத்தில் வட்டார மருத்துவ அலுவலா் பசுபதி தலைமையிலான மருத்துவக் குழுவினா் ஆலங்காயம் காவல் ஆய்வாளா் நாகராஜன் மற்றும் ஆலங்காயம் போலீஸாருக்கு தடுப்பூசி போட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை - நாகா்கோவில், கொச்சுவேலி வாராந்திர ரயில்கள் நீட்டிப்பு

உடல் பருமன் சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: அமைச்சரிடம் தந்தை புகாா்

தமிழகத்தில் 1,000 இடங்களில் நீா்ச்சத்து குறைபாட்டை போக்கும் மையங்கள்

பிஎஸ்என்எல்-க்கு 5 ஜி சேவையை வழங்க வேண்டும்: ஓய்வூதியா் மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தல்

1,282 பட்டதாரி ஆசிரியா்களுக்கு ஊதியம் வழங்க கொடுப்பாணை

SCROLL FOR NEXT