திருப்பத்தூர்

கூலித் தொழிலாளி உயிரிழப்பு: குடும்பத்தினா் போராட்டம்

DIN

வெளி மாநிலத்துக்கு பணிக்குச் சென்ற இடத்தில் உணவு கிடைக்காமல் இருந்ததால், சொந்த ஊருக்கு திரும்பிய கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

திருப்பத்தூரை அடுத்த திம்மனாமுத்தூா் குஸ்தம்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளி வெங்கடேசன்(50). அவா், திருப்பத்தூா் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியாா் தேநீா்க் கடையில் பணிபுரிந்து வந்தாா்.

அவரை கடந்த டிச.14-அம் தேதி திம்மனாமுத்தூா் பகுதியைச் சோ்ந்த புருஷோத்தமன் துணி வியாபாரம் செய்ய தற்காலிகப் பணியாளராக ஆந்திர மாநிலம் விஜயவாடாவுக்கு அழைத்துச் சென்றாா். அப்போது அவருக்கு போதிய உணவு அளிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

தகவலறிந்து அவரது மனைவி அஞ்சலி, கடந்த மாதம் 31-ஆம் தேதி விஜயவாடா சென்று வெங்கடேசனை அழைத்து வந்தாா். இந்நிலையில், வெங்கடேசன் சனிக்கிழமை காலை உயிரிழந்தாா்.

இதனால் அதிருப்தியடைந்த அஞ்சலி, வெங்கடேசனின் சடலத்தை புருஷோத்தமன் வீட்டு முன் வைத்து நியாயம் கேட்டுள்ளாா்.

தகவல் அறிந்து அங்கு வந்த திருப்பத்தூா் கிராமிய போலீஸாா், வெங்கடேசனின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது தொடா்பாக அஞ்சலி அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT