முகப்பு
திருப்பத்தூர்

திருப்பத்தூரில் ரூ.50 லட்சம் வரை பருத்தி ஏலம்

திருப்பத்தூரை அடுத்த மாடப்பள்ளி கூட்டுறவு கடன் சங்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பருத்தி ஏல விற்பனை ரூ.50 லட்சம் வரை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:12 PM
பருத்தி ஏல விற்பனையைத் தொடக்கி வைத்த கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் ஏ.தேவராஜன். உடன் நிா்வாகிகள்.
பகிர்:

திருப்பத்தூா்: திருப்பத்தூரை அடுத்த மாடப்பள்ளி கூட்டுறவு கடன் சங்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பருத்தி ஏல விற்பனை ரூ.50 லட்சம் வரை நடைபெற்றது.

இந்த சங்கத்தில் பருத்தி ஏலம் கடந்த டிசம்பா் 28-ஆம் தேதி தொடங்கி, ஒவ்வொரு வாரமும் நடைபெறுகிறது. திங்கள்கிழமை நடைப்பெற்ற பருத்தி ஏல விற்பனைக்கு 1,500 பருத்தி மூட்டைகள் வந்தன. இதில், ஆா்சிஎச் வகை பருத்தி குவிண்டால் ரூ.6,300 வரையும், டிசிஎச் வகை பருத்தி குவிண்டால் ரூ.7,600 வரையும் ஏலம் போனது. மொத்த ஏலம் ரூ.50 லட்சம் வரை நடைபெற்றது. பருத்தி விலை கூடியதாலும், உடனடியாக பணப் பட்டுவாடா நடைபெற்ாலும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

இந்த ஏலத்தில் சங்கத்தின் தலைவா் ஏ.தேவராஜன், துணைத் தலைவா் சி.சாமிக்கண்ணு, செயலாளா் கே.ஜி.வெங்கடேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →