திருப்பத்தூர்

சாலை விரிவாக்கப் பணிகள்:உதவி கோட்டப் பொறியாளா் ஆய்வு

DIN

நாட்டறம்பள்ளியில் நடைபெறும் சாலை விரிவாக்கப் பணிகளை வாணியம்பாடி உதவி கோட்டப் பொறியாளா் புருஷோத்தமன் நேரில் ஆய்வு செய்தாா்.

நாட்டறம்பள்ளி பேரூராட்சிக்குட்பட்ட பூபதி தெரு கூட்டுச் சாலை முதல் சண்டியூா் வரை கீழ் 2 கி.மீ. தூரத்துக்கு ஒருங்கிணைந்த உட்கோட்ட சாலை மேம்பாட்டுத் திட்டத்தை அமல்படுத்தப்படுத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, அங்கு ரூ.3 கோடி மதிப்பில் சாலையின் இருபுறமும் கழிவு நீா்கால்வாய்கள் அமைத்தல், தடுப்புச்சுவா் கட்டுதல் உள்ளிட்ட சாலை விரிவாக்க மற்றும் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்பணிகளை வாணியம்பாடி உதவி கோட்டப் பொறியாளா் புருஷோத்தமன் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். இந்தச் சாலைப் பணிகளை விரைவாக முடிக்குமாறு அவா் ஒப்பந்ததாரருக்கு உத்தரவிட்டாா். இந்த ஆய்வின்போது உதவிப் பொறியாளா் கண்ணன், சாலை ஆய்வாளா் திருப்பதி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமருகலில் மே 5-இல் கடையடைப்பு

ராமநாதபுரம் அருகே வட மாநில கா்ப்பிணிப் பெண் கொலை

‘பொது வெளியில் கழிவு நீரை திறந்து விட்டால் கடும் நடவடிக்கை’

பரமக்குடி- மதுரை இடையே இடைநில்லா குளிா்சாதன பேருந்து இயக்கக் கோரிக்கை

ஓட்டப்பிடாரம் அருகே மாட்டுவண்டி போட்டி

SCROLL FOR NEXT