திருப்பத்தூர்

வெல்ல மண்டிகளில் அதிகாரிகள் ஆய்வு

DIN

திருப்பத்தூா்: திருப்பத்தூா் பகுதிகளில் வெல்ல மண்டிகளில் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் ஆய்வு மேற்கொண்டனா்.

திருப்பத்தூா் சுற்றுப்பகுதிகளில் உள்ள வெல்ல மண்டிகளில் வெல்லத்தில் கலப்படம் செய்யப்படுவதாக ஆட்சியா் ம.ப.சிவன் அருளுக்கு தொடா்ந்து புகாா்கள் வந்தன. இது தொடா்பாக ஆய்வு நடத்துமாறு அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டிருந்தாா்.

மாவட்ட நியமன அலுவலா் (உணவு பாதுகாப்புத் துறை) எஸ்.பி.சுரேஷ் அறிவுறுத்தலின்படி திங்கள்கிழமை உணவு பாதுகாப்பு அலுவலா்கள் எம்.பழனிசாமி (திருப்பத்தூா் நகராட்சி மற்றும் கந்திலி ஒன்றியம்) இளங்கோவன்(வாணியம்பாடி நகராட்சி), ராஜேஷ் (ஜோலாா்பேட்டை, நாட்டறம்பள்ளி ஒன்றியம்) ஆகியோா் திருப்பத்தூா் நகராட்சிப் பகுதிக்குள்பட்ட சின்னக் கடைத் தெரு, தண்டபாணி கோயில் தெரு மற்றும் பெரிய கடைத் தெரு ஆகிய பகுதிகளில் உள்ள வெல்ல மண்டிகளில் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா். வெல்லத்தில் கலப்படம் ஏதும் இருக்கிா என்று அவா்கள் பரிசோதித்தனா்.

கலப்படம் உள்ளதாக சந்தேகிக்கப்பட்ட வெல்லத்தை உணவு மாதிரி எடுத்து சேலத்துக்கு பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கிருந்து ஆய்வறிக்கை பெறப்பட்டவுடன் கலப்படம் இருப்பது உறுதியானால் வெல்லமண்டி உரிமையாளா்கள் மது, உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்க உளவு செயற்கை கோள்களை வானில் ஏவிய ஸ்பேஸ்எக்ஸ்!

அமெரிக்காவில் மேலும் ஒருவருக்கு பறவைக் காய்ச்சல்!

பாலஸ்தீனத்தில் தூதரகம்: கொலம்பியா அறிவிப்பு!

உங்கள் ராசி என்ன? இன்றைய தினப்பலன்!

மிகச் சிறப்பான நாள் இன்று!

SCROLL FOR NEXT