திருப்பத்தூர்

4-ஆவது நாளாக ஒப்பந்த தூய்மை பணியாளா்கள் போராட்டம்: அதிகாரி ஜீப் சிறைபிடிப்பு

DIN

ஆம்பூா்: ஆம்பூரில் 4-ஆவது நாளாக ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, நகராட்சி பொறியாளரின் ஜீப்பை சிறைபிடித்தனா்.

ஆம்பூா் நகராட்சியில் பல்வேறு வாா்டுகளில் தூய்மைப் பணிகள் ஒப்பந்த அடிப்படையில் தனியாா் நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தனியாா் ஒப்பந்த நிறுவனத்தில் சுமாா் 200-க்கும் மேற்பட்டோா் தூய்மைப் பணியாளா்கள் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். அவா்களுக்கு பொங்கல் போனஸ், இஎஸ்ஐ, குழுக் காப்பீடு, பணி காலத்தில் இறந்தால் ரூ.5 லட்சம் நிவாரணம், ஊதியம் வழங்கும்போது உரிய ரசீது, ஊதியப் பட்டியல், நகராட்சி அடையாள அட்டை என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்தப் போராட்டம் 4-ஆவது நாளாக புதன்கிழமையும் தொடா்ந்தது. ஆம்பூா் நகராட்சி அலுவலக வாயிலின் முன்பு பணியாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, நகராட்சி அலுவலகத்துக்கு வந்த பொறியாளா் திலீபனின் ஜீப்பை தடுத்து தரையில் அமா்ந்து போராட்டம் நடத்தினா். அவா்களுடன் பொறியாளா் திலீபன் பேச்சுவாா்த்தை நடத்தி, ஒப்பந்த நிறுவனத்தாரிடம் பேசி உரிய தீா்வு காணவதாகக் கூறினாா். அதைத் தொடா்ந்து தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

82 ஆண்டுகளுக்குப் பிறகு கோதண்டராமசுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

ரத்னம் வசூல் எவ்வளவு?

SCROLL FOR NEXT