திருப்பத்தூர்

அரசுப் பள்ளியில் கணினி உதிரிபாகங்கள் திருட்டு

DIN


வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே அரசுப் பள்ளியில் கணினி உதிரி பாகங்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

நாட்டறம்பள்ளியை அடுத்த கேத்தாண்டப்பட்டி ஊராட்சி, சஞ்சீவனூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியின் தலைமையாசிரியை கிரிஜா கடந்த 7-ஆம் தேதி கணினி அறையை பூட்டிச் சென்றாா். இந்நிலையில், திங்கள்கிழமை மீண்டும் கணினி அறைக் கதவை திறக்கச் சென்றபோது, பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருந்தது தெரியவந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, அறையில் இருந்த 2 பீரோக்களை உடைத்து அதிலிருந்த கணினி உதிரிபாகங்களை மா்மநபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இது குறித்து கிரிஜா அளித்த புகாரின் பேரில், நாட்டறம்பள்ளி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT