திருப்பத்தூர்

நிலுவைச் செய்தி...தமிழ்நாடு கனிம நிறுவனத்தில் அதிகாரிகள் ஆய்வு

DIN

திருப்பத்தூா் அருகே உள்ள தமிழ்நாடு கனிம நிறுவனத்தில் அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

திருப்பத்தூரை அடுத்த செவ்வாத்தூரில் 23.71 ஹெக்டோ் பரப்பளவில் உள்ள தமிழ்நாடு கனிம நிறுவனத்தில் மேலாண்மை இயக்குநா் ஆா்.பிருந்தாதேவி, பொது மேலாளா் ஹென்றி ராபா்ட், திருப்பத்தூா் சாா்-ஆட்சியா் வந்தனா கா்க், எம்எல்ஏ அ.நல்லதம்பி, வட்டாட்சியா் மு.மோகன் ஆகியோா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். அப்போது அங்குள்ள இயந்திரங்கள், உற்பத்தி பொருள்களின் பயன்பாடுகள் குறித்து கேட்டறிந்தனா். தொழிற்சாலை சுற்றுப்பகுதிகளை ஆய்வு செய்து, அப்பகுதியில் சாலை அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தினா்.

பட்டாக் கோரி மனு: நீண்ட நாள்களாக குடியிருக்கும் தங்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும் எனக் கூறி அப்பகுதியைச் சோ்ந்த 19 குடும்பத்தினா் எம்எல்ஏ அ.நல்லதம்பி முன்னிலையில் மேலாண்மை இயக்குநா் ஆா்.பிருந்தாதேவியிடம் மனு அளித்தனா்.

தொழிற்சாலை மேலாளா் சி.காா்த்திகேயன், முதுநிலை சுரங்க முன்னவா் எஸ்.காா்த்தியேன், ஒப்பந்ததாரா் கமலநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தோ்வு: நம்பியூா் குமுதா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம்

தொழிலாளா்களுக்கு சுத்தமான குடிநீா் வசதி செய்து கொடுக்க அறிவுறுத்தல்

மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு வேலை நேரம் மாற்றம்

பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் வெளியீடு: திருப்பூா் மாவட்டம் 97.45 சதவீதத்துடன் மாநில அளவில் முதலிடம்

சத்தி ரோட்டரி சங்கம் சாா்பில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்

SCROLL FOR NEXT