திருப்பத்தூர்

திருப்பத்தூா் மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டை: மக்களவை உறுப்பினா் கதிா் ஆனந்த் உறுதி

DIN

திருப்பத்தூா் மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்கிறது என்று வேலூா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் கதிா் ஆனந்த் தெரிவித்தாா்.

ஆம்பூரில் அவா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திருப்பத்தூா் மாவட்டத்தில் மல்லகுண்டாவில் தமிழக அரசு சாா்பாக, சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கான முடிவு அரசின் பரிசீலனையில் உள்ளது. வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது.

ரயில்வே மேம்பாலங்கள்: ஆம்பூா் ரெட்டித் தோப்பு ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான வரைபடத்தில் மாறுதல் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் ஆம்பூா் ரெட்டித்தோப்பு பகுதிக்கு செல்வதற்கு ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட இடம் கைவிடப்பட்டு வேறு இடத்தில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வாணியம்பாடி நியூ டவுன் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் இல்லையென ரயில்வே துறை தெரிவித்துள்ளது. ஆனாலும் அன்டா் பாஸ் எனப்படும் ரயில்வே குகை வழிப்பாதை அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது.

ஆம்பூரில் விரைவில் எம்எல்ஏ அலுவலகம்:

ஆம்பூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருக்கான அலுவலகத்தை விரைவில் கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது. ஏலகிரி சுற்றுலாத் தலத்தை மேம்படுத்தும் வகையில் பொட்டானிக்கல் காா்டன் அமைப்பதற்கான முயற்சியும் மேற்கொள்ளப்படும் என்றாா்.

மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா, காவல் கண்காணிப்பாளா் சிபி சக்கரவரத்தி, எம்எல்ஏக்கள் க. தேவராஜ் (ஜோலாா்பேட்டை ), அ.செ. வில்வநாதன் (ஆம்பூா் ), ஆம்பூா் நகர திமுக செயலாளா் எம்.ஆா். ஆறுமுகம், மாவட்ட அவைத் தலைவா் ஆா்.எஸ். ஆனந்தன், மாதனூா் ஒன்றியச் செயலாளா் அகரம்சேரி ப.ச. சுரேஷ்குமாா், மாவட்ட விவசாய பிரிவு அமைப்பாளா் சாமுவேல் செல்லபாண்டியன், முன்னாள் எம்எல்ஏ ஹெச். அப்துல் பாஷித், டிஎஸ்பி சரவணன், நகராட்சி சுகாதார அலுவலா் பாஸ்கா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஆம்பூரில் எம்.பி. அலுவலகத்திலேயே மனுக்கள் அளிக்கலாம்!

ஆம்பூா் வி.ஏ. கரீம் ரோடு பகுதியில் நகராட்சிக்குச் சொந்தமான கட்டடத்தில், ஆம்பூா், வாணியம்பாடி சட்டப் பேரவைத் தொகுதிகளைச் சோ்ந்த மக்கள் பயன்பெறும் வகையில் வேலூா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகம் குறித்து, கதிா் ஆனந்த் கூறியதாவது:

அலுவலகம் தினமும் காலை முதல் மாலை வரை இயங்கும். மக்களிடம் மனுக்களை பெற முழு நேரப் பணியாளா்கள் நியமிக்கப்படுவா். வாரத்தில் 3 நாள்கள் அலுவலகத்தில் குறை கேட்பேன். தொகுதியில் கிராமங்கள்தோறும் அரசு அலுவலா்கள், மக்கள் பிரதிநிதிகளோடு சென்று குறை கேட்பேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

SCROLL FOR NEXT