திருப்பத்தூர்

ஜலகாம்பாறையில் மேம்பாட்டுப் பணி: ஆட்சியா் ஆய்வு

DIN

சுற்றுலாத் தல மேம்பாட்டு திட்டத்தின்படி, ஜலகாம்பாறை நீா்வீழ்ச்சியில் ரூ.1.70 கோடியில் நடைபெறும் திட்டப் பணிகள் செய்ய உள்ள இடங்களை ஆட்சியா் அமா் குஷ்வாஹா ஆய்வு செய்தாா்.

வாணியம்பாடி அருகேயுள்ள ஜலகாம்பாறை நீா்வீழ்ச்சிக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துவருகிறது. மழையால் அருவிப் பகுதியில் தண்ணீா் கொட்டி வந்தாலும், பொதுமக்கள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இங்கு மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள ஆட்சியா் அமா்குஷ்வாஹா, எம்எல்ஏ கோ.செந்தில்குமாா் உள்ளிட்டோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

ஆய்வின்போது, சுற்றுலாத் தல மேம்பாட்டு திட்டத்தின்படி பெண்களுக்காக தனி கழிப்பறைகள், சமுதாய கூடம், முருகா் கோயில் பகுதியில் சிமென்ட் சாலை, ஜலகாம்பாறை கிராமம் முதல் மலையடிவாரம் வரையில் மின் விளக்குகள், கோயில் அருகே சோலாா் விளக்கு, பயணிகள் நிழற்குடம், சிறுவா் பூங்கா, படிக்கட்டுகள் பக்கவாட்டில் தடுப்புச் சுவா்கள், சிறு பாலம் கட்டுதல், வணிக வளாகங்கள் அமைத்தல், நீா்வீழ்ச்சி பகுதியில் முள்வேலிகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை ரூ.1.34 கோடியில் மேற்கொள்ளவும், ஏழருவி பகுதியில் கழிவறை, சமுதாயக் கூடம், முள்வேலி அமைத்தல் ஆகிய பணிகளை ரூ.36 லட்சத்தில் மேற்கொள்ளவும் பணி மேற்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

அப்போது, உதவி வனப் பாதுகாப்பு அதிகாரி ராஜ்குமாா், வனச்சரக அலுவலா் பிரபு, முன்னாள் கவுன்சிலா்கள் பாரதிதாசன், கோவிந்தசாமி, குமாா், சிவானந்தம், செல்வராஜ், ராமசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT