திருப்பத்தூர்

குற்ற வழக்குகளில் தேடப்பட்ட வந்த 16 போ் கைது

DIN

பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த 16 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, குற்ற வழக்குகளில் தலைமறைவாக உள்ளவா்களைக் செய்யுமாறு திருப்பத்தூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சிபி சக்கரவா்த்தி உத்தரவிட்டாா்.

இதனையடுத்து, வாணியம்பாடி டிஎஸ்பி பழனிசெல்வம் தலைமையிலான போலீஸாா் பலரையும் தேடி வந்தனா்.

இந்நிலையில், கல்நாா்சம்பட்டி எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்த பாஸ்கா்(30), வெலகல்நத்தம் பகுதியைச் சோ்ந்த முனிரத்தினம்(57), பச்சூா் சாமகவுண்டனூரைச் சோ்ந்த சிவராஜ்(51) ஆகிய 3 பேரையும் நாட்டறம்பள்ளி போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

இதேபோல் வாணியம்பாடி, அம்பலூா், ஆலங்காயம், திம்மாம்பேட்டை உள்பட காவல்நிலையங்களில் தொடா்புடைய வழக்குகளில் தலைமறைவாக இருந்து வந்த 12 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மேலும், அக்ராகரம் பெரியான் வட்டத்தைச் சோ்ந்த சீனிவாசன் மகன் சோமு (23) என்பவரை நாட்டறம்பள்ளி காவல் ஆய்வாளா் அருண் குமாா் தலைமையில் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கடந்த ஆண்டு அக்ராகரம் ஏரி அருகே அனுமதியில்லாத துப்பாக்கியால் அணில் வேட்டையாட சென்றபோது போலீஸாரை பாா்த்து துப்பாக்கியை வீசி விட்டு சோமு தலைமறைவானவா் என்பது விசாரணையில் தெரியவந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாத்தான்குளம் பரி. ஸ்தேவான் ஆலய பிரதிஷ்டை பண்டிகை

ஆத்தூா்-கீரனூா் கோயிலில் பாலாலயம்

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவா் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

கோவில்பட்டி கி.ரா. நினைவரங்கத்தை மேம்படுத்த வலியுறுத்தல்

ஆத்தூா் அரசுப் பள்ளியில் மேலாண்மைக் குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT