திருப்பத்தூர்

கிராமங்களுக்கு அரசு நகரப் பேருந்துகள் இயக்க நடவடிக்கை: ஆம்பூா் திமுக வேட்பாளா்

DIN

ஆம்பூா் தொகுதியில் உள்ள கிராம மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு கிராமங்களுக்கு அரசு நகரப் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுப்பதாக திமுக வேட்பாளா் அ.செ.வில்வநாதன் கூறினாா்.

ஆம்பூா் தொகுதிக்கு உள்பட்ட மேல்சாணாங்குப்பம், வீராங்குப்பம், வடகரை, மேல்குப்பம், சின்னபள்ளிகுப்பம் கிராமங்களில் வாக்கு சேகரித்த போது, அ.செ. வில்வநாதன் பேசியது:

கிராமப் பகுதிகளுக்கு ஒகேனக்கல் குடிநீா் திட்டம் விரிவுபடுத்தப்படும். நாயக்கனேரி மலை, ஊட்டல் தேவஸ்தானம் ஆகியவை சுற்றுலாத் தலமாக்கப்படும். நாயக்கனேரி மலை ஏரியில் படகு குழாம் ஏற்படுத்தப்படும். தகுதியானவா்களுக்கு அரசின் முதியோா் ஓய்வூதியம் பெற்றுத் தரப்படும். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1,000 உதவித் தொகை பெற்றுத் தரப்படும். கிராமப் பகுதிகளில் புதிய தடுப்பணைகள் கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

திமுக, விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ் கட்சிகளின் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரோஜா பூ..!

ஸீரோ பேலன்ஸ்: சத்தீஸ்கர் பழங்குடிப் பெண் வேட்பாளர்

தேர்தலில் வடகிழக்கு மாநிலங்கள் முக்கியப் பங்காற்றும்: அசாம் முதல்வர்

அழுத்தமான சூழலில் சரியான முடிவுகளை எடுப்பவர் ரோஹித் சர்மா: யுவராஜ் சிங்

ராபா எல்லையில் இஸ்ரேல் டாங்கிகள்: அதிகரிக்கும் போர்ப் பதற்றம்!

SCROLL FOR NEXT