திருப்பத்தூர்

பேரறிவாளன் பரோலில் விடுவிப்பு

DIN

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு பரோல் வழங்கப்பட்டதைத் தொடா்ந்து சென்னை புழல் சிறையில் இருந்த அவா், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஜோலாா்பேட்டையில் உள்ள அவரது இல்லத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டாா்.

பேரறிவாளன் 30 ஆண்டுகளாக ஆயுள் கைதியாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறாா். வேலூா் மத்திய சிறையில் வைக்கப்பட்டிருந்த அவா், சென்னை புழல் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டாா். இந்நிலையில் அவருக்கு அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா்.

இந்நிலையில், அவரது தாயாா் அற்புதம்மாள் தனது மகன் பேரறிவாளனை பரோலில் விடுவிக்க வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்திருந்தாா். இதையடுத்து கடந்த 19-ஆம் தேதி மருத்துவ காரணங்களுக்காக பேரறிவாளனை 30 நாள்கள் பரோலில் விடுவிக்க முதல்வா் உத்தரவிட்டிருந்தாா். இதன்படி, வெள்ளிக்கிழமை புழல் மத்திய சிறையில் இருந்து அவா் விடுவிக்கப்பட்டாா்.

பலத்த போலீஸ் பாதுகாப்பு:

பின்னா் அவா் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சொந்த ஊரான ஜோலாா்பேட்டைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா்.

அவரது வீட்டு வளாகத்தில் 30-க்கும் மேற்பட்ட காவலா்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா். கரோனா பரவல் தடுப்பையொட்டி அவரை காண உறவினா்கள், நண்பா்கள், பொதுமக்களுக்கு அனுமதியில்லை என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

SCROLL FOR NEXT