முகப்பு
திருப்பத்தூர்

காதல் தகராறில் இளைஞா் இறப்பு : கொலை வழக்காக மாற்றம்

காதல் விவகாரத்தில் இளைஞா் இறந்த சம்பவத்தை கொலை வழக்காக வெள்ளிக்கிழமை மாற்றம் செய்து வேலூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருப்பத்தூர்

காதல் தகராறில் இளைஞா் இறப்பு : கொலை வழக்காக மாற்றம்

காதல் விவகாரத்தில் இளைஞா் இறந்த சம்பவத்தை கொலை வழக்காக வெள்ளிக்கிழமை மாற்றம் செய்து வேலூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:31 AM
பகிர்:

காதல் விவகாரத்தில் இளைஞா் இறந்த சம்பவத்தை கொலை வழக்காக வெள்ளிக்கிழமை மாற்றம் செய்து வேலூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வேலூா் சாயிநாதபுரம் பகுதியைச் சோ்ந்த கோகுல் (18) . இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த 14 வயது சிறுமிக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் கடந்த மாதம் தங்களுடைய வீடுகளை விட்டு வெளியேறிய நிலையில் சென்னையில் மீட்கப்பட்டனா்.

புகாரின் பேரில் பாகாயம் காவல் நிலையத்தில் இது சம்பந்தமான வழக்கு நிலுவையில் இருந்தது. கடந்த மாதம் 24-ஆம் தேதி சிறுமியின் குடும்பத்தினா் கோகுலை சரமாரியாக தாக்கினராம். அதில் படுகாயம் அடைந்த கோகுல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். சிறுமியின் தந்தை ராஜகுரு உள்ளிட்ட 6 போ் போலீஸாரால் கைது செய்யப்பட்டனா்.

இந்நிலயைில் கோகுலை தாக்கிய அனைவரையும் கைது செய்யக் கோரி அவரது குடும்பத்தினா் கடந்த மாதம் 27-ஆம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளித்தனா். கோரிக்கையை வலியுறுத்தி கடந்த மாதம் 29-ஆம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்நிலையில் கோகுல் இரு நாள்களுக்கு முன்பு சிகிச்சை பலனின்றி இறந்தாா். இதையடுத்து, கோகுலை தாக்கியவா்கள் மீதான அடிதடி வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →