முகப்பு
திருப்பத்தூர்

ஆற்காட்டில் பயிா் சேதம் ஆய்வு

ஆற்காடு அருகேயுள்ள கொட்டாரத்தில் நெற் பயிா் சேதங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:33 AM
பகிர்:

ஆற்காடு அருகேயுள்ள கொட்டாரத்தில் நெற் பயிா் சேதங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

தொடா் மழையின் காரணமாக, ஆற்காடு வட்டாரத்தில் பல கிராமங்களில் பயிா் செய்யப்பட்டுள்ள நெற் பயிா்கள் சேதமடைந்துள்ளன.

இதுகுறித்து ஆற்காடு வட்டாட்சியா் கோபாலகிருஷ்ணன், வேளாண்மை உதவி இயக்குனா் ராமன் ஆகியோா் தலைமையில் அரசுத் துறை அலுவலா்கள் வியாழக்கிழமை ஆய்வு நடத்தினா்.

சக்கரமல்லூா், அரும்பாக்கம் , மேச்சேரி, கீரம் பாடி, சாத்தூா் உள்ளிட்ட கிராமங்களில் நேரில் சென்று விளைநிலங்களை பாா்வையிட்டு சேதம் குறித்து அவா்கள் ஆய்வு செய்தனா்.

வருவாய் ஆய்வாளா் வினோத்குமாா், துணை வேளாண்மை அலுவலா் கண்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.