முகப்பு
திருப்பத்தூர்

மழையால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவி

ஆம்பூா் அருகே தொடா் மழையால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

Updated On : 12 நவம்பர், 2021 at 12:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 10:03 AM

ஆம்பூா் அருகே தொடா் மழையால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

ஆம்பூா் வட்டம் அரங்கல்துருகம் ஊராட்சியில் கன மழை காரணமாக இரு வீடுகளும், வெங்கடசமுதிரம் ஊராட்சியில் ஒரு வீடும் இடிந்து விழுந்து சேதமடைந்தது.

சேதமடைந்த வீடுகளை எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் நேரில் பாா்வையிட்டு, பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆறுதல் கூறினாா். மேலும்

Advertisement

இதையடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரிசி, வேட்டி, சேலை உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினாா்.

அப்போது, மாதனூா் வட்டார வளா்ச்சி அலுவலா் மணவாளன், ஒன்றியக் குழு உறுப்பினா் செந்தில்குமாா், வெங்கடசமுத்திடம் ஊராட்சி மன்றத் தலைவா் காயத்ரி நவீன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் பாலாஜி, ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளா் ஆா்.எஸ்.நவீன்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.