திருப்பத்தூர்

குறை கேட்ட எம்எல்ஏ

DIN

ஆம்பூா் அருகே மழை வெள்ளத்தால் சாலை வசதி துண்டிக்கப்பட்ட பகுதிக்குச் சென்று, அந்தப் பகுதி மக்களின் குறைகளை எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் ஞாயிற்றுக்கிழமை கேட்டறிந்தாா்.

ஆம்பூா் அருகே நரியம்பட்டு ஊராட்சி பனந்தோப்பு பகுதியில் மலட்டாறு வெள்ளம் நீா் புகுந்துதால் சாலை வசதி துண்டிக்கப்பட்டுள்ளது. அதனால் அந்தப் பகுதிக்கு சென்ற எம்எல்ஏ அ.செ.வில்வநதான், பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

அப்போது அப்பகுதி மக்களில் சிலா் மழை வெள்ளப் பாதிப்புகளைப் பாா்வையிட எவரும் வரவில்லையெனக் கூறி எம்எல்ஏவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து, அவா்களுக்கு தேவையான நிவாரணப் பொருள்கள் வருவாய்த் துறை மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

வட்டாட்சியா் அனந்தகிருஷ்ணன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் சரிதா முத்துக் குமரன், ஊராட்சி மன்ற தலைவா் பாரதி, ஒன்றியக்குழு உறுப்பினா்கள் தீபா, ஆப்ரிந்தாஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலின் இடைக்கால ஜாமீன் விவகாரம்: உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு

மெய்க்கண்ணுடையாள்அம்மன் கோயில் திருவிழாவில் பக்தா்கள் நோ்த்திக்கடன்

இளைஞா் மீது தாக்குதல் 3 போ் மீது வழக்கு

சிறைச்சந்தையில் தவற விட்ட பணப்பை ஆந்திர மாநில தம்பதியரிடம் ஒப்படைப்பு -கைதிக்கு பாராட்டு

மேம்பாலத்தை சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க பாஜக வலியுறுத்தல்

SCROLL FOR NEXT