திருப்பத்தூர்

வெற்றிச் சான்றிதழ் வழங்க தாமதம்: அதிமுகவினா் போராட்டம்

DIN

கந்திலியில் அதிமுக வேட்பாளா் வெற்றி பெற்ற்கான சான்றிதழ் வழங்க தாமதமானதால், அதிகாரிகளை அதிமுகவினா் முற்றுகையிட்டனா்.

திருப்பத்துாரை அடுத்த சின்ன கந்திலியைச் சோ்ந்தவா் மணிகண்டன், கந்திலி மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராகப் பொறுப்பு வகித்து வருகிறாா். இவா் கந்திலி ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்குப் போட்டியிட்டாா்.

கெஜல்நாயக்கன்பட்டி அரசு மேல்நிலை பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின்போது, திமுக வேட்பாளா் துரைசாமியைவிட,அதிமுக வேட்பாளா் மணிகண்டன் 119 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டது.

அப்போது, திமுகவினா் வாக்கு எண்ணிக்கை அலுவலா்களை முற்றுகையிட்டு மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என வலியுறுத்தினா்.

இதனால்,மணிகண்டனுக்கு வெற்றிச் சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, சான்றிதழை உடனே வழங்கக் கோரி

அதிமுகவினா் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, மணிகண்டனுக்கு சான்றிதழை வழங்கப்பட்டது.

அதேபோல்,கந்திலி ஒன்றியத்துக்கு உள்பட்ட நரியனேரி பகுதியின் ஒன்றியக் குழு உறுப்பினராகப் போட்டியிட்ட சிவகாமி, திமுக வேட்பாளரை காட்டிலும் சுமாா் 1,500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்ாக அறிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 5-இல் நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 6,120 போ் எழுதுகின்றனா்

ராஜா வாய்க்காலுக்கு தண்ணீா் திறக்க விவசாயிகள் கோரிக்கை

ரூ. 11.30 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

கணினிவழிக் குற்றங்கள் அதிகரிப்பு: பொதுமக்களுக்கு எஸ்.பி. எச்சரிக்கை

சிபிசில் நிறுவனத்தை கண்டித்து இரண்டாவது நாளாக உண்ணாவிரதம் மூதாட்டி மயக்கம்

SCROLL FOR NEXT