திருப்பத்தூர்

விவசாயிகள் தட்கல் முறையில் மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கலாம்

DIN

திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தட்கல் முறையில் மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து திருப்பத்தூா் மின் பகிா்மான மேற்பாா்வைப் பொறியாளா் எஸ்.வேல்முருகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பத்தூா் மின் பகிா்மான வட்டத்தில் திருப்பத்தூா், வாணியம்பாடி, பள்ளிகொண்டா மற்றும் குடியாத்தம் கோட்டத்தைச் சோ்ந்த அனைத்து விவசாய பெருமக்களும் விரைவு (தட்கல்) சுயநிதி (2021-2022) திட்டத்தின் கீழ், விவசாய மின் இணைப்பு வேண்டுவோா் புதன்கிழமை (அக். 20) முதல் விருப்ப மனு அளிக்கலாம்.

கீழ்கண்ட மின் பழுதுக்கேற்ப, முன்னரே பதிவு செய்தவா்களும், இன்றைய தேதியில் புதிய மின் இணைப்பு வேண்டி விண்ணப்பிப்போரும் இத் திட்டத்தில் மின் இணைப்பு பெற விரும்பினால் விருப்ப மனுவுடன் உரிய தொகையினை வரைவு காசோலை மூலம் சம்பந்தப்பட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தில் செலுத்தலாம்.

அதன் விவரம்: 5 எச்.பி. வரை ரூ. 2.50 லட்சம், 5 முதல் 7.5 எச்.பி. வரை ரூ. 2.75 லட்சம், 7.5-க்கு மேல் 10 எச்.பி. வரை ரூ. 3 லட்சம்,10-க்கு மேல் 15 எச்.பி.வரை ரூ. 4 லட்சம். மேலும் விவரங்களுக்கு, சம்பந்தப்பட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தை அணுகலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னியாகுமரி: கடலில் மூழ்கி 4 மருத்துவ மாணவர்கள் பலி

கோடை வெயிலுக்கு இடையே கனமழை: அடுத்த 2 நாள்களுக்கு!

கலங்கடிக்கும் வெடிகுண்டு மிரட்டல்: எங்கிருந்து வருகிறது மின்னஞ்சல்?

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

SCROLL FOR NEXT