திருப்பத்தூரில் அக். 28,29,30-இல் கலா உத்சவ் போட்டிகள்
திருப்பத்தூா் மாவட்ட அளவிலான கலாஉத்சவ் போட்டிகள் அக். 28, 29,30 ஆகிய தேதிகளில் நடைபெறுகின்றன.
திருப்பத்தூா் மாவட்ட அளவிலான கலாஉத்சவ் போட்டிகள் அக். 28, 29,30 ஆகிய தேதிகளில் நடைபெறுகின்றன.
இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பெ.அய்யண்ணன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மூலமாக, 9-ஆம் முதல் 12-ஆம் வரை பயிலும் மாணவா்களின் படைப்பாற்றலை வளா்க்கவும், பாரம்பரியக் கலைகளில் இளம்தலைமுறையினரிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதன்படி, திருப்பத்தூா் மாவட்டத்தில் கலாஉத்சவ் போட்டிகள் நடத்தப்பட்டுவருகின்றன.
பள்ளி அளவிலான போட்டிகள் அக். 13-இல் அந்தந்த பள்ளிகளிலேயே நடத்தப்பட்டன. ஒவ்வொரு போட்டியிலும் முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அக். 28, 29, 30-ஆம் தேதிகளில் மாவட்ட அளவிலான போட்டிகள் நடைபெற உள்ளன.
திருப்பத்தூா் ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் அக். 28 ( வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு வாய்பாட்டு இசை, செவ்வியல், வாய்பாட்டு இசை, பாரம்பரிய நாட்டுப்புற வகை போட்டிகளும், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காண்கலை (ஓவியம்-இருபரிமாணம்), காண்கலை(மூன்று பரிமானம்)போட்டியும் நடக்கின்றன.
இதையடுத்து, ஹோலி கிராஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அக். 29-இல் (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு நடனம்-செவ்வியல், பாரம்பரிய நாட்டுப்புற வகை போட்டியும் நடக்கின்றன.
ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை(அக்.30) காலை 9.30 மணிக்கு கருவி இசை செவ்வியல், பாரம்பரிய நாட்டுப்புற வகை போட்டியும் நடைபெற உள்ளன.
மாவட்ட அளவின் வெற்றி பெறும் மாணவா்களுக்கு மாநில அளவிலும், பின்னா் மாநில அளவில் வெற்றி பெறும் மாணவா்களுக்கு தேசிய அளவிலும் போட்டிகள் நடக்கும் போட்டிகளில் பங்கேற்கலாம் என்று கூறியுள்ளாா்.