திருப்பத்தூர்

15 சிறுமிகளின் திருமணம் தடுத்து நிறுத்தம்

DIN

 ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற இருந்த 15 சிறுமிகளின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.

வெள்ளிக்கிழமை விநாயகா் சதுா்த்தி அன்று சுபமுகூா்த்த தினமாக இருந்ததால் வேலூா் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் திருமணங்கள் நடைபெற்றன. அதே நாளில் குழந்தை திருமணம் நடைபெற உள்ளதாக மாவட்ட சமூக நல அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சமூக நலத் துறை, சைல்ட் லைன் அமைப்பு மற்றும் காவல் துறையினா் அடங்கிய குழுவினா் வேலூா், திருப்பத்தூா் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் திடீா் சோதனை நடத்தினா்.

அப்போது வேலூா் மாவட்டத்தில் 3 சிறுமிகள், திருப்பத்தூா் மாவட்டத்தில் 8 சிறுமிகள், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 4 சிறுமிகள் என மொத்தம் 15 சிறுமிகளுக்கு திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. அதன்பேரில், அந்த திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, சிறுமிகள் மீட்கப்பட்டு, அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனா். பெற்றோா்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் ரத்னம் எப்போது?

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

ஓ மை ரித்திகா!

பதவியை தக்கவைக்க பாஜக எந்த எல்லைக்கும் செல்லும்: கார்கே

11 மணி நிலவரம்: 25.41% வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT